பழனிக்கு காவடி எடுத்து பக்தர்கள் பாதயாத்திரை
ADDED :1436 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர்,தூரி,கிடாத்திருக்கை, ஏனாதி,காக்கூர்,வெண்ணீர்வாய்க்கால், பேரையூர்,இளஞ்செம்பூர், புல்வாய்க்குளம், எட்டுசேரி உட்பட ஏராளமான கிராமங்களில் பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாலை அணிவித்து விரதம் இருந்து வந்தனர்.இந்நிலையில் முதுகுளத்தூர்- பரமக்குடி சாலை வழிவிடு முருகன் கோயிலில் இருந்து 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து பஸ் ஸ்டாண்ட்,காந்தி சிலை, முருகன் கோயில் செல்வி அம்மன் கோயில் வழியாக அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வந்தனர். பின்பு பக்தர்கள் பழனிக்கு 10நாள் பாதயாத்திரையாக புறப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சரவணா பழனி பாதயாத்திரை குழு மற்றும் ஆன்மீக அறக்கட்டளை செய்தனர்.