ஸ்ரீரங்கம் மார்கழி பாவை நோன்பு: 27ம் நாள் விழா
ADDED :1376 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடந்து வரும் மார்கழி பாவை நோன்பு விழாவின் இருபத்தி ஏழாம் நாளான இன்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியருளிய..
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா ! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
என்ற திருப்பாவை இருபத்தி ஏழாம் பாசுரத்திற்கு ஏற்ப உற்சவர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை, "ராதா கிருஷ்ணர் திருக்கோலத்தில்" அலங்காரம் செய்வித்து தினப்படி பூஜைகள் நடந்தேறியது.