திருமலையில் 2வது மலைப்பாதை தயார்
ADDED :1444 days ago
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு செல்வதற்கான இரண்டாவது மலைப் பாதையில், இன்று(ஜன.,11) முதல் சோதனை முறையில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் பெய்த கன மழை காரணமாக, திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் இரண்டாவது மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் அந்த சாலை சேதமடைந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் முடிவடைந்துஉள்ளதை அடுத்து இன்று இரவு முதல் இரண்டாவது மலைப் பாதையில் சோதனை முறையில் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது. விரைவில் இந்த பாதையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.