திருப்புல்லாணி கோயிலில் ஸ்வர்ண அலங்காரத்தில் ஜெகநாத பெருமாள்
ADDED :1443 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பகல் பத்து ஒன்பதாம் நாள் உற்ஸவத்தை முன்னிட்டு கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு சொர்ண அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நவரத்தின கிரீடம், ஒட்டியாணம், தங்க கொடிப்பதக்கம், சங்கு சக்கரம், சொர்ண காசு மாலை, தங்க பதக்கம், புலிநகக் அட்டியல் உள்ளிட்ட ஸ்வர்ண மோகன மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 11 மணி அளவில் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களை கோயில் பட்டாச்சாரியார்கள் பாடினர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஜன., 13 அன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 10 மணிக்கு சயனதிருக்கோலமும், இரவு 7:00 மணிக்கு கோயிலில் பரமபத சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜன., 13 முதல் 22 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்க உள்ளது.