உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் அருகே முதுமக்கள் தாழி: ஆய்வில் கண்டுபிடிப்பு!

திருப்புத்தூர் அருகே முதுமக்கள் தாழி: ஆய்வில் கண்டுபிடிப்பு!

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே காரையூர் கண்மாய் பகுதியில் ஆங்காங்கே பழைய மண்பாண்ட சிதிலங்கள் கிடைப்பதாக கல்லூரி வரலாற்று துறைக்கு தெரியவந்தது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்ட அருங்காட்சியக காப்பாளர் பக்கிரிசாமி தலைமையில் மாணவர்கள் காரையூர் கண்மாய் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மூன்று முதுமக்கள் தாழி கிடைத்தது. அவை நான்கு அடி உயரம், இரண்டரை அடி அகலத்தில் இருந்தன. இது குறித்து பக்கிரிசாமி கூறுகையில்,"சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த பொதுமக்கள், இறந்தவர்களை இரண்டாம் நிலை புதைப்பு எனப்படும் பழக்கத்தை கடை பிடித்துள்ளனர். அப்போது இறந்தவர்களை எரிப்பது தான் வழக்கம். எலும்புகளை மண்பானைகளில் வைத்து, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், விரும்பிய உணவுகளையும் வைத்து புதைத்து விடுவர். இந்த பானை தான் "முதுமக்கள் தாழி என அழைக்கப்படுகிறது.இது போன்ற முதுமக்கள்  தாழி தான் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது, என்றார். ஆய்வில், வரலாற்றுத் துறை தலைவர் பேராசிரியர் வெங்கடாசலபதி, பேராசிரியர்கள் அருள்மணி குணவதி, தனலெட்சுமி, முத்துலெட்சுமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !