சிவகங்கையில் பழனி பாதயாத்திரை துவக்கம்
ADDED :1423 days ago
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் குறிப்பாக செட்டிநாடு பகுதியிலிருந்து பாரம்பரியமாக பழனிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். இன்று காலை குன்றக்குடியிலிருந்து நகரத்தார் மற்றும் நாட்டார் காவடிகள் புறப்பட்டது. இவர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் தைப்பூசத்தை பழனியில் கொண்டாட நடந்து செல்கின்றனர். இதனால் பழனி செல்லும் ரோடுகளில் பல மாவட்ட பக்தர்கள் யாத்திரை செல்வதை காண முடிகிறது.