பழனி பாதயாத்திரை பக்தர்கள் 36 முறை கந்த சஷ்டி வழிபாடு
ADDED :1363 days ago
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பழனி பாதயாத்திரை பக்தர்கள் குழு சார்பில் ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 36 முறை கந்த சஷ்டி பாடல் படித்து வேல் பூஜை செய்தனர். இப்பகுதி பக்தர்கள் 48ம் ஆண்டு பழனி பாதயாத்திரையாக ஜனவரி 13ல் புறப்படுகின்றனர். மாலை அணிந்த பக்தர்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விரதமிருந்து வழிபாடு செய்கின்றனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் நேற்று பழனி பாதயாத்திரை பக்தர்கள் குழு தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் 36 முறை கந்தசஷ்டி பாடல் பாடினர். பக்தர்கள் பாதயாத்திரையில் தங்களுடன் பாதுகாப்பாக கொண்டு செல்லும் வெள்ளி வேலுக்கு பல வகை அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர்.