உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கை கொண்ட சோழபுரம் கோயில் நிலங்கள் அளவீடு பணி தொடக்கம்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் நிலங்கள் அளவீடு பணி தொடக்கம்

பெரம்பலுார்: கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. அரசுக்கு சொந்தமான கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் நில அளவீடு செய்ய இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் உத்தரவிட்டார். அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 350 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி கங்கைகொண்ட சோழபுரத்தில் நேற்று தொடங்கியது. அளவீடு பணியில், சென்னையில் இருந்து வருகை தந்துள்ள இந்து சமய அறநிலைத்துறை தனி வட்டாட்சியர் ஆனந்தவேல் தலைமையில், நில அளவையர்கள், ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் காமராஜ், கோயில் செயல் அலுவலர் சிலம்பரசன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !