சக்தி விநாயகருக்கு கும்பாபிஷேக விழா
ADDED :4871 days ago
திண்டிவனம்: திண்டிவனம் முருங்கப் பாக்கம் சிவசக்திநகர் சக்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் மூலவர் விமான கலசத்திற்கு நடந்த கும்பாபிஷேக விழாவை செல்லப்பா குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் செய்து வைத்தனர். விழா குழுவினர் காசிநாதன், சேகர், குப்பன், வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.