உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாதசி விழா பக்தர்கள் நடனத்துடன் பஜனை

ஏகாதசி விழா பக்தர்கள் நடனத்துடன் பஜனை

அன்னூர்: அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில், பஜனை நடந்தது. பிரசித்தி பெற்ற, அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் அதிகாலையில், சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. பெருமாள் கோவில் வளாகத்தில் உலா வந்து அருள் பாலித்தார். நேற்றுமுன்தினம் இரவு 8:00 மணிக்கு அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் பஜனை துவங்கியது. பஜனையில் பக்தர்களின் பிருந்தாவன நடனமும் நடந்தது. நள்ளிரவு வரை நடந்த பஜனையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து வீடுகளிலேயே கண்விழித்து பெருமாளை சேவித்த பக்தர்களுக்கு நேற்று காலை தனியார் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !