கிராமங்களில் சிறப்பு பூஜை
ADDED :1364 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வழக்கமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். தற்போது கொரோனா தொற்று பிரச்னை அதிகரிப்பால் வழிப்பாட்டு தலங்களை நேற்று முதல் ஜன.18 வரை தொடர்ச்சியாக திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பக்தர்கள் பலரும் கோயில் வாசலை தொட்டு வழிபட்டு சென்றனர். கிராமங்களில் விளைநிலங்களுக்குள் ஒதுக்குப்புறமாக இருந்த குல தெய்வ கோயில்களில் அதிகளவு கெடுபிடி இல்லாமல் இருந்தது. இதனால் தலைக்கட்டுதாரர்கள் அங்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். திறக்காத கோயில்களில் வாசலிலே வழிபட்டனர்.