முழு ஊரடங்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் வெறிச்
ADDED :1461 days ago
ராமேஸ்வரம்: முழு ஊரடங்கினால் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் ரதவீதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.
கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தினர். இதனால் ராமேஸ்வரத்தில் தங்கும் விடுதிகள் வகைகள் மூடினர். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், கடைத் தெருக்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. மேலும் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரை, ரதவீதியில் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.