மரம் போல மாடும் இருக்கணும்!
ADDED :1381 days ago
பசுவின் சாணத்தை கோமயம் என்பர். பொதுவாக மிருகங்களின் மலத்தால் நோய்கள் பரவும். ஆனால் பசுவின் சாணம் மட்டும் கிருமி நாசினியாக விளங்குகிறது. அந்தக்காலத்தில் வீடு முழுவதும் வீட்டின் தரையை மெழுகுவர். வாசல் தெளிப்பதற்கும் சாணம் கரைத்த தண்ணீரையே தெளிப்பர். இதன் மூலம் வீட்டுக்குள் பூச்சி, நோய்க்கிருமிகள் அண்டாது. வீட்டில் பசு இருந்தால் அந்த வீட்டிற்கு சுபலட்சுமி தேடி வருவாள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்பது போல பசுமாடு ஒன்றும் இருப்பது அவசியம்.