உறைகிணற்றில் சுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1357 days ago
சாயல்குடி: சாயல்குடி அருகே உறைக்கிணறு கிராமத்தில் ஸ்ரீ தேவி,:பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஜன., 15 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. திவ்ய பிரபந்தம், பாராயணம், மகாலட்சுமி, சுமங்கலி பூஜை, சப்தகன்னி பூஜை, பூர்ணாகுதி உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று 11:00 மணியளவில் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை சத்திரிய இந்து நாடார் உறவின்முறையினர் செய்திருந்தனர்.