காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1516 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழைமடல் காளியம்மன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில், பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சந்தன, குங்கும, பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மூலவரான அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டதுடன், அம்மன் துதி பாடல்கள் பாடப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெண்கள் கும்மி ஆட்டம் ஆடி நேத்திகடன் நிறைவேற்றினர்.