பழநி முருகனை தரிசனம் செய்ய விடிய விடிய காத்திருக்கும் பக்தர்கள்
ADDED :1371 days ago
பழநி : பழநி முருகன் கோயில் தைப்பூச விழா ஜனவரி 12-ஆம் தேதி முதல் தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுகிறது .முக்கிய நிகழ்வான தைப்பூசம் இன்று பக்தர்கள் அனுமதியின்றி நடந்தது.14ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்க மறுத்ததால் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் ஆங்காங்கே தங்கி உள்ளனர் நாளை 19ம் தேதி கோயில் திறப்பதால் இன்று இரவு விடிய விடிய கிரிவீதியை சுற்றி பக்தர்கள் பழநி முருகனை தரிசனம் செய்ய காத்திருக்கின்றனர்.