சிரவையாதீனத்தில் தைப்பூச தேரோட்டம்
ADDED :1408 days ago
சரவணம்பட்டி: சின்னவேடம்பட்டியில் உள்ள கவுமார மடலாயத்தில் உள்ள தண்டபாணி திருக்கோயில் தைப்பூச திருவிழா, தேர் பவனி நேற்று நடந்தது.
சின்னவேடம்பட்டியில் சிரவையாதீனத்தில் உள்ள தண்டபாணி கடவுள் திருக்கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜன.15ல் துவங்கியது. தைப்பூச திருநாளான நேற்று காலை முலவர் திருமஞ்சனம், பகல் 12 மணிக்கு கந்தர் அனுபூதி நுால் வெளியீடு நடந்தது. நேற்று மாலை திருத்தேரோட்ட நிகழ்ச்சி, சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகள் தலைமையில் நடந்தது. திருத்தேர் கோயிலை வலம் வந்து நிலையை அடைந்தது. தொடர்ந்து தண்டபாணி கடவுளுக்கு தீபாராதனை நடந்தது. தைப்பூச திருவிழா முகநூலிலும், யூடியூப்பில் நேரலையாக ஒளிபரப்ப பட்டது.