நித்யகல்யாண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி
ADDED :1362 days ago
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் இராப்பத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள ஸ்ரீநித்யகல்யாண ரங்கநாதப்பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவில் மார்கழி மாதம் தினம் பல்வேறு அலங்காரத்தில் பெருமாள் காட்சிஅளிப்பார்.பெருமாள் கோவிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் முன்னிட்டு இராப்பத்து 9ம் திருநாள் முன்னிட்டு உத்ஸவர் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் பனிக்குல்லா,மகர கர்ணபத்திரம்,வைர அபயஹஸ்தம்,பெரிய பிராட்டி பதக்கம்,காசு மாலை,நெல்லிக்காய் மாலை, முதலான திருவாபரணங்களை சாற்றிக்கொண்டு ஸ்ரீநம்மாழ்வார் அருளிய பாசுரங்களை கேட்டவாறு சேவை சாதித்தார் பின்னர் மகா தீபாரதனை நடைபெற்றது.இதில் ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.