தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி
ADDED :1681 days ago
அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி விழா நடந்தது.மல்லிகை, ரோஜா உள்ளிட்ட 16 வகையான வண்ண மலர்களால் சுவாமியின் உருவப் படம் அமைக்கப்பட்டிருந்தது. உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு ஏற்றப்பட்டு கூட்டு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.