சப்த கன்னிமார்கள் கோயிலில் வருஷாபிஷேகம் பூஜை
ADDED :1364 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே திருவாக்கி கிராமத்தில் சப்த கன்னிமார்கள் கோயிலில் வருஷாபிஷேகம் பூஜை நடந்தது.காலை 5.00 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி சிறப்பு பூஜை நடந்தது. பின்பு நாகராஜன் குருக்கள் தலைமையில் சப்த கன்னிமார்களுக்கு பால், சந்தனம் உட்பட 17 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தீபாரதனை நடந்தது.பின்பு கிராமமக்கள் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.