உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை மீனாட்சியம்மன் கோயில் திருப்பணிக்கு அனுமதி

வடமதுரை மீனாட்சியம்மன் கோயில் திருப்பணிக்கு அனுமதி

வடமதுரை: வடமதுரை மீனாட்சியம்மன் கோயில் திருப்பணிக்கு அனுமதி கிடைத்தது.

தமிழ்நாட்டில் பல கோயில்கள் சிதலமடைந்து பராமரிப்பு, கால முறையில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமலும் இருப்பது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமைக்கப்பட்ட ஐவர் குழுவிடம் வடமதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலின் நிலை குறித்து புகைப்படங்களாக பதிவு செய்து வழங்கப்பட்டது. திருப்பணி அனுமதி வழங்க துறை ரீதியான நடவடிக்கை துவங்கின. ஆனால் கொரோனா தொற்று பிரச்னையால் நிர்வாக கிடைப்பதில் தாமதமானது. கடந்த 2006ல் கும்பாபிஷேகம் நடந்த வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு திருப்பணி அனுமதி கிடைத்து பணி நடக்கிறது. ஆனால் 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் கும்பாபிஷேகம் நடக்காமல் மீனாட்சியம்மன் கோயில் மட்டும் அப்படியே இருந்ததால் பக்தர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். தற்போது மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் திருப்பணி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து செயல் அலுவலர் மாலதி தலைமையில் பொறியாளர்கள் மதிப்பீடு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !