சிதம்பரத்தில் சண்டேசுர நாயனார் குருபூஜை விழா
ADDED :1374 days ago
சிதம்பரம்: சிதம்பரத்தில் சண்டேசுர நாயனார் குருபூஜை விழா நடந்தது. கனகசபை நகரில் உள்ள ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி நிலையத்தில் தருமபுரம் ஆதீனம் சார்பில் மடத்தில் உள்ள 63 நாயன்மார்களில் சண்டேசுர நாயனார் குருபூஜை விழா நடந்தது. இதில் நாயன்மார்களில் சண்டேசுர நாயனாருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் ,சிறப்பு ஆராதனைகள் நடந்தது . குருபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர் . தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.