குன்றத்தில் கோயில் வாசல் முன் நடந்த திருமணங்கள்
ADDED :1394 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வாசலில் கொரோனா முழு ஊரடங்கு எதிரொலியாக 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன
கொரோனா தடையுத்தரவால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முகூர்த்த நாளால் 10க்கும் மேற்பட்ட மணமக்கள் கோயில் வாசலில் திருமணம் செய்து கொண்டனர். மணமக்களுடன் குறைந்த எண்ணிக்கையில் உறவினர்கள் வரவும், முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றவும் போலீசார் அறிவித்தபடி இருந்தனர். பக்தர்கள் கூறுகையில், கோயில் நுழைவு மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு தெய்வானை அம்மனை தாரை வார்த்து கொடுக்கும் சிற்பம் உள்ளது. மணமக்களை மட்டுமாவது அதன் முன் தாலிகட்ட அனுமதிக்க வேண்டும், என்றனர்.