மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
1348 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
1348 days ago
காரைக்கால்: திருநள்ளாறு கோவில் யானை சிறுவர்களுடன் நண்பனாக விளையாடும் வீடியோ வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.இதனால் சிறுவர்கள் பலர் யானைனை சந்திந்து வருகின்றனர்.
காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு ஆசி வழங்கவும், விழாக் காலங்களில் சாமி புறப்பாடு சமயத்தில் உடன் செல்லவும் கோவில் நிர்வாகம் கடந்த 2011ம் ஆண்டு பிரக்ரிதி யானை வாங்கப்பட்டது.கோவில் யானையிடம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நண்பனாக பழகுவது வழக்கம் இதனால் அனைவரும் கவரும் வகையில் யானை ஆசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் வாரம் ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவிலுக்கு குறைவான பக்தர்கள் வருகின்றனர்.இந்நிலையில் திருநள்ளாறு கோவிலுக்கு வரும் காரைக்கால் நேதாஜி நகரை சேர்ந்த யுவபாரதி(12),நாராயணன்(10)ஆகிய இரண்டு சகோதரர்கள் கோவிலுக்கு வரும் போது யானையை சந்திப்பது வழக்கம் இருவரும் யானைக்கு பிடிக்கு வாழைப்பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வாங்கிவந்து தனது நண்பன் யானை சந்திப்பது வழக்கம் கோவில் யானையுவன் சகோதர்கள் விளையாடுவது மற்றும் அவர்களுக்கு ஆசி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகா பரவி வருகிறது.இதனால் சிறுவர்கள் பலர் கோவில் யானை சந்திந்து வருகின்றனர்.
1348 days ago
1348 days ago