உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் அரண்மனை சந்தன கருப்பணசாமி கோவில் திருவிழா: 4 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

நத்தம் அரண்மனை சந்தன கருப்பணசாமி கோவில் திருவிழா: 4 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

நத்தம்: நத்தம் வேலம்பட்டி அரண்மனை சந்தன கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடந்தது. கடந்த ஜன 21,ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. சந்தன கருப்பண்ணசாமி ஊர்வலமாக கிளம்பி நத்தம் மாரியம்மன் கோவில், அண்ணாமலை செட்டியார் இல்லம், தெலுங்கு தெரு, காளியம்மன் கோவில் வழியாக நகர்வலம் வந்து அரண்மனை சந்தன கருப்பண்ண சாமி கோவிலை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று ஜன 25, பொங்கல் வைத்து, கிடா வெட்டி சாமிக்கு படைத்து பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது‌. இந்த அன்னதானத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவரும் பாகுபாடின்றி சந்தன கருப்பணசாமி கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து அன்னதானத்தில் கலந்து கொண்டனர். இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !