உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்தூரில் பொங்கல் விழா

முதுகுளத்தூரில் பொங்கல் விழா

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் நகர் சலவையாளர் சங்கத்தின் சார்பில் செல்வி அம்மன் கோயில் 51ம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது.விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். தெருவில் இருந்து காந்திசிலை, தேரிருவேலி முக்குரோடு வழியாக பொங்கல் பெட்டி தூக்கி ஊர்வலமாக வந்தனர். பின்பு கோயில் முன்பு பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். செல்வி அம்மனுக்கு அபிஷேகம், சிறப்புபூஜைகள் நடந்தது.இரவு சலவையாளர் சங்கத்தின் சார்பில் 108 விளக்குபூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !