மோட்ச தீபம் ஏற்றி இந்து அன்னையர் முன்னணி கோயிலில் வழிபாடு
ADDED :1350 days ago
ஆண்டிபட்டி: தஞ்சை மாவட்டத்தில் தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்த அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்த 17 வயது மாணவி மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியதாக தெரிவித்து பூச்சி மருந்து குடித்து இறந்தார். மாணவியின் ஆத்மா அமைதி பெறவும், இதற்கான விசாரணையில் நியாயம் கிடைக்கவும் வேண்டி ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இறந்த மாணவிக்காக மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். ஹிந்து முன்னணி, ஹிந்து அன்னையர் முன்னணி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.