கோயிலில் சுவாமிக்கு நடக்கும் அபிஷேகத்தின் நோக்கம்
ADDED :1396 days ago
கோயிலில் சுவாமிக்கு பூஜை நடக்கும் போது விதவிதமாக அபிஷேகம் செய்யப்படும். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். நதிகள், கடலில் சங்கமிக்கும் போது நதி என்ற பெயர் மறைந்து விடுகிறது. இது போலவே மனிதனும் தன்னை இழந்து பரமாத்வாகிய கடவுளிடம் ஒன்றி கலக்க வேண்டும் என்பதை அபிஷேகம் உணர்த்துகிறது.