சொல்லாதே யாரும் கேட்டால்...
சொல்கிறார் சாணக்கியர்
* ஒரு செயலை செய்து முடிக்குவரை யார் கேட்டாலும் அதைப்பற்றி சொல்லாதே.
* உன்னுடைய பேச்சை பொறுத்தே உன் எதிர்காலம் உள்ளது.
* உனக்கு உதவி செய்தவர்களை ஒருபோதும் மறக்காதே.
* மகான்களின் சந்திப்பு கிடைத்துவிட்டால் உன் தலைமுறையே ஒளிரும்.
* பெரியவர்களின் அறிவுரையை கேட்டால் நல்ல பாதையில் பயணிக்கலாம்.
* ‘தினமும் நமக்கு சாப்பிட உணவு கிடைக்கிறதே’ என திருப்தியாக இரு.
* மனதை அமைதியாக வைத்துக்கொள். மகிழ்ச்சி எங்கே உள்ளது என தெரியும்.
* முட்டாளாக இருக்காதே. எல்லா விஷயத்தையும் அறிந்துகொள்.
* பிறர் வீட்டிற்கு சென்று வாழ்வதுதான் நமக்கு மிகவும் கஷ்டமான விஷயம்.
* குழந்தைகளுக்காக சொத்து சேர்ப்பதை விட அவர்களுக்கு நல்லதை சொல்லிக்கொடு.
* உனக்கு ஒன்றுமே தெரியாது என்றாலும் பரவாயில்லை. தினமும் படி அறிவாளியாகிவிடுவாய்.
* தினமும் கடவுளை வணங்கு. உனது பாவம் குறையும்.
* கடவுளின் பார்வை உன்மீது விழுந்தால் மட்டுமே முயற்சியில் வெற்றி பெறுவாய்.
* எப்போதும் மகிழ்ச்சியாக இரு. கடினமான பணிக்கூட எளிதாகிவிடும்.