குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க...
ADDED :1385 days ago
குழந்தைகளை நாம் அதிகம் நேசிப்போம். அந்த நேசம் எப்படிப்பட்டது என்றால் நாம் விரும்பியதை அவர்கள் செய்யும்வரையில்தான். நமது விருப்பத்தில் இருந்து அவர்கள் சிறிது விலகினால் போதும் உடனே கோபம் வந்துவிடும். அவர்களது ஆசைகளுக்கு ஏற்ப இருக்க விட மாட்டோம்.
விளையாட வேண்டிய வயதில் பள்ளியில் சேர்த்துவிடுவோம். அன்பால் அவர்களை கட்டி வைக்காமல் புத்தகங்களால் கட்டிப்போடுகிறோம். அவர்கள் சுதந்திரமாக இருப்பதையே விரும்புவதில்லை. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து நாம் இப்படியெல்லாம் செய்கிறோம். இதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்களை சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள். நிச்சயம் நாம் எதிர்பார்த்ததைவிட அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமையும்.