உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளத்தை நிறுத்திய சிவன்

வெள்ளத்தை நிறுத்திய சிவன்


திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுார் அருகிலுள்ள திருப்புடைமருதுாரில் நாறும்பூநாதர் கோயில் உள்ளது. தாமிரபரணி நதிக்கரையில் உள்ள இக்கோயிலில் சிவன் சுயம்புலிங்கமாக இருக்கிறார். முற்காலத்தில் இக்கோயில் மருத மரங்கள் நிறைந்த காட்டின் நடுவில் இருந்தது. இங்கு சிவனை தரிசனம் செய்ய கருவூர்சித்தர் வந்த போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அவரால் ஆற்றைக் கடந்து கோயிலுக்கு செல்ல முடியவில்லை. கரையில் நின்றபடியே சிவனிடம் வேண்டினார். அப்போது மருத மலர்களின் மணம் வீசியது. அதை உணர்ந்த அவர், ‘நறுமணமுடைய சிவனே!’ என்ற பொருளில், ‘நாறும்பூ நாதா! நான் அங்கே வர வேண்டும்’ என்று பாடினார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவன் வெள்ளத்தை நிறுத்தி கோயிலுக்குள் வர அருள்புரிந்தார். கருவூராரால் நறுமணம் மிக்கவர் என்று பாடப்பட்டதால் இவர், ‘நாறும்பூ நாதர்’ எனப் பெயர் பெற்றார். இவருக்கு சந்தன தைலத்தால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. வெள்ளத்தால் பொருளை இழந்தவர்கள் இவரை வழிபட்டால் நன்மை உண்டாகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !