மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1343 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1343 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 16 கால் கல்மண்டபம் அமைக்கும் பணி துவங்கியது. சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் பொருட்டு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி வேலைகள் தொடங்கியது. திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு அனைத்துப் பணிகளும் உபயதாரர்கள் உதவியுடன் நடக்கிறது. 5 நிலைகள் கொண்ட கிழக்கு ராஜகோபுரமும், 3 நிலைகள் கொண்ட தெற்கு ராஜகோபுரமும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு கோபுரம் முன்பாக ஆறுகால் கல்மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு கோபுரம் முன்பாக பதினாறு கால் கல்மண்டபம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதையொட்டி நேற்று முதல் தூண் நிறுத்தப்பட்டது. கிராமப் பெரியவர்கள் முன்னிலையில் கோயில் சிவாச்சாரியார்கள் தூணுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து மண்டப கட்டுமான பணிகள் நடக்கிறது. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விரைவில் கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்படும் என கிராமத்தினர் தெரிவித்தனர்.
1343 days ago
1343 days ago