கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1391 days ago
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த இடங்கொண்டான்பட்டு, புதுார் கிராமத்தில் கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் நவக்கிரக யாகம், கோ பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. மாலை, மகா வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை ஆகியவை நடந்தன. நேற்று காலை இரண்டாம் கால பூஜை, காப்பு கட்டுதல், யாத்ராதானம், விநாயகர் கலசங்கள் ஆலய வலம் வந்து கற்பக விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.