உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா துவக்கம்

பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா துவக்கம்

பழநி: பழநி முருகன் கோயிலில் உப கோவிலான கிழக்குவீதி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நேற்று மூகூர்த்த கால்நடுதலுடன் துவங்கியது.

பழநி முருகன் கோயிலில் உப கோவிலான மாரியம்மன் கோயில் கிழக்கு ரத வீதியில் உள்ளது. இங்கு நடைபெறும் மாசித் திருவிழாவையொட்டி நேற்று இரவு 8 மணிக்கு மூகூர்த்த கால் நடப்பட்டது. பிப்.,1ல் திருக் கம்பம் சாட்டுதல் நடைபெறும். பிப்., 8 அன்று கொடியேற்றம் நடைபெறும். அதன்பின் பிப்., 15 அன்று இரவு 8 மணிக்கு திருக்கல்யாணமும், பிப் 16ம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.பிப்., 17 அன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். விழா ஏற்பாடுகள் கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆகியோர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி நடைபெறும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !