மடப்புரம் காளி கோயிலில் பக்தர்கள் தரிசனம்
ADDED :1355 days ago
திருப்புவனம்: மடப்புரம் காளி கோயிலில் நேற்று தைமாதம் வெள்ளியை முன்னிட்டு குறைந்த அளவிலான பக்தர்களே அம்மனை தரிசனம் செய்தனர். மடப்புரம் காளி கோயிலில் வெள்ளி செவ்வாய் , ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், கோயில்களில் அனைத்து நாட்களிலும் தரிசனத்திற்கு அனுமதி அளித்த நிலையிலும் போதிய அளவில் பொதுமக்களுக்கு தெரியாததால் மடப்புரத்தில் நேற்று தை மாதம் வெள்ளிக்கு குறைந்த அளவிலான பக்தர்களே தரிசனம் செய்தனர். நண்பகல் உச்சி கால பூஜையில் பெண்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. வெள்ளிகிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.