மேல்மலையனூர் அங்காளம்மன் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து
ADDED :1355 days ago
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை ரத்து செய்துள்ளனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டும், பொதுமக்கள் நலன் கருதியும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வருகின்ற ஜன. 31 ம் தேதி அமாவாசையன்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்துச் செய்யப்படுகின்றது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழக்கமான சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட மாட்டாது. என இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.