சுட்டெரிக்கும் வெயிலில் மழை தரும் மரம்
ADDED :4881 days ago
ஆந்திரா மாநிலத்தில் சிவ சைலம் தலத்தின் அருகே கடனா நதி ஓடுகிறது. அதனைத் தாண்டி உள்ள இடம், அத்திரி முனிவரின் ஆசிரமம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆசிரமத்தினருகே அமிர்தவர்ஷிணி மரம் உள்ளது. சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திரம் சுட்டெரிக்கும் காலத்தில் இந்த மரத்தில் இருந்து மழைத்துளிகள் போல் தானாகவே தண்ணீர் தோன்றி சுற்றிலும் தெளிப்பது அதிசயமான நிகழ்வாகும்.