/
கோயில்கள் செய்திகள் / சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கான சேவை கட்டணம் ரூபாய் 10 ஆக உயர்வு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கான சேவை கட்டணம் ரூபாய் 10 ஆக உயர்வு
ADDED :1360 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்காக தாணிப்பாறை வனத்துறை கேட்டில் வசூலிக்கப்படும் சேவை கட்டணம் ரூபாய் 5 லிருந்து 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு செல்பவர்களிடம் சேவை கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்பட்டு வந்தத. இது மலைவாழ் மக்கள் வருவாய் ஆதாரமாக திகழ்ந்தது. தற்போதுள்ள சூழ்நிலையில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும் நிலையில் சேவை கட்டணத்தை ரூபாய் 5 லிருந்து 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது.