பெருமாள் கோவிலில் மண்டல பூஜை துவக்கம்
ADDED :1361 days ago
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தாலுகா, வடசித்துாரில், 800 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவில் சீரமைப்பு திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிேஷகம் விமரிசையாக நடந்தது.மண்டல பூஜை துவங்கியதையடுத்து, கோவிலில் நேற்று முன்தினம் நந்தா தீபம் ஏற்றப்பட்டது. 48 நாட்களுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜையும், அன்னதானமும் நடக்கிறது.