கற்பக விருக்ஷங்கள்!
ADDED :4881 days ago
கல்பம் என்றால் எண்ணம் அல்லது விருப்பம் என்பதாகும். நாம் விரும்பியதை, தரும் மரங்கள் தான் கற்பக விருக்ஷம் எனப்படுகிறது. அது தேவலோகத்தில் இருக்கும் மரம். தேவலோகத்தில் இருக்கும் மரங்கள் ஐந்து. 1. மந்தாரம், 2. பாரிஜாதம், 3. ஸந்தானம், 4. கல்பகவிருக்ஷம், 5. ஹரிசந்தனம் என்பன. பாற்கடலைத் தேவர்கள் அமுதம் வேண்டி கடைந்த பொழுது இந்த ஐந்து கல்பத்ருக்களும் அதில் தோன்றின.