நாகராஜா கோயிலில் குவிந்த பக்தர்கள்: மகிழ்ச்சியுடன் தரிசனம்
ADDED :1364 days ago
நாகர் கோவில்: மூன்று வாரங்களுக்கு பின்னர் கோ யில்கள் திறக்கப்பட்டதால் நேற்று நாகர் கோவில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.
கொரோனா த டுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள் மூடப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இத்னால் கடந்த 3 வாரங்களாகபக்தர்கள் கோயிலுக்கு வந்து வெளியில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவித்து கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா கோயிலுக்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.