மதுரை வைகையாற்றில் விநாயகர் சிலை கண்டெடுப்பு
ADDED :1442 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கருப்பட்டி வைகை ஆற்றில் விநாயகர் சிலை இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் சென்று ஒன்றே முக்கால் அடி உயரம், ஒன்றரை கிலோ எடை உள்ள விநாயகர் உலோக சிலையை மீட்டனர். சிலை வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.