உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாரணாசி கங்கையில் குவிந்த பக்தர்கள்: புனித நீராடி வழிபாடு

வாரணாசி கங்கையில் குவிந்த பக்தர்கள்: புனித நீராடி வழிபாடு

வாரணாசி: தை அமாவாசையையொட்டி வாரணாசி கங்கையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

தை அமாவாசையன்று, புண்ணிய நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு மக்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். உத்தர பிரதேசம், வாரணாசியில் உள்ள புண்ணிய நதியான கங்கையில் நேற்று புனித நீராட நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் குவிந்தனர். முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பக்தர்கள் திதி, தர்ப்பணம் பூஜை செய்து, சிவசிவ கோஷமிட்டபடி புனித நீராடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !