உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் குண்டம் திருவிழா துவக்கம்

மாசாணியம்மன் குண்டம் திருவிழா துவக்கம்

ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலமான, கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு குண்டம் திருவிழா இன்று பிப்., 1ம் தேதி காலை, 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 14ம் தேதி நள்ளிரவு மயான பூஜை, 15ம் தேதி காலை, 7:30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், 17ம் தேதி காலை, 9:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 19ம் தேதி காலை, 11:30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !