உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி கோவிலில் தருமை ஆதீனம் வழிபாடு

கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி கோவிலில் தருமை ஆதீனம் வழிபாடு

தஞ்சாவூர்: தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் தஞ்சாவூர் மாவட்டம் கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சம்ஸ்தான் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடக்கிறது. அதற்கான பூர்வாங்க பூஜையில் உலக நலன் வேண்டி நடந்த சிறப்பு ஹோமத்தில்  தருமை ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்  ஞான ரதத்தில் வந்தார். பூரண கும்பத்துடன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆதீனம் குருமகா சந்நிதானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் மூலவர் மற்றும் கோசாலையில் ஆதீனம் சிறப்பு வழிபாடு செய்தார். யாகசாலை மண்டபத்தை பார்வையிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். கோவில் ஸ்தாபகர் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் பொன்னாடை மாலை அணிவித்து பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !