நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்
ADDED :1541 days ago
நான்குநேரி: நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் தெப்ப குளத்தில் தெப்ப உற்சவ திருவிழா நேற்று நடந்தது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் அமாவாசை முன்னிட்டு நேற்று முன்தினம் ஒரு ண்ணெய் காப்பு வைவம் நடந்தது. தொடர்ந்து நேற்று தெப்ப உற்சவ திருவிழா நடந்தது. இதில் நேற்று காலை வானமாமலை பெருமாள் , ஸ்ரீவரமங்கை தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கை தாயார் பல்லக்கில் எழுந்தருளி அருகில் உள்ள கிருஷ்ணன் கோயில் தெப்ப குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 12 முறை சுற்றி வந்தது. நிகழ்ச்சியில் நான்குநேரி வானமாமலை மடத்தின் 31வது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர், பொது மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்றும்(3ம் தேதி) இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.