கோரிசித்தேஸ்வரா கோவில் தேர்த்திருவிழா
ADDED :1312 days ago
கலபுரகி: கலபுரகி சித்தாபுரா அருகே உள்ள நாலவாரா கிராமத்தில் நாலவாரா மடத்தின் சார்பில் கோரிசித்தேஸ்வரா கோவில் திருவிழா ஆண்டு தோறும் விமரிசயைாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா இம்மாதம் 3ல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. கொரோனா விதிமுறை இருப்பதால் தாலுகா நிர்வாகம் , தடை விதித்து இருந்தது. ஆனால் கோவில் நிர்வாகம் சார்பில் சம்பிரதாய பூஜை நடத்தி, 10 அடி மட்டும் தேரை நகர்த்த அனுமதி கேட்டிருந்தது. அதன்படி நேற்று காலை தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் தடை யை மீறி அதிக துாரம் தேரை இழுத்து சென்றனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி பக்தர்களை கலைத்தனர். பின், தேர் இருந்த இடத்துக்கே கொண்டு வரப்பட்டது. நாலவரா மடத்தின் பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.