உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன், ஜோதி விநாயகர் கோவில் மண்டல பூஜை நிறைவு

பாலமுருகன், ஜோதி விநாயகர் கோவில் மண்டல பூஜை நிறைவு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமுருகன், ஜோதி விநாயகர் திருக்கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் பாலமுருகன், ஜோதி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா, 23ம் தேதி நடந்தது. தொடர்ந்து, 12 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜை நிறைவு நாள் விழா, நேற்று காலை கோவில் அருகே உள்ள மைதானத்தில் நடந்தது. காலை, 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, 9:00 மணிக்கு கலச வேள்வி, 108 சங்கு பூஜை, 11:30 மணிக்கு, 108 சங்காபிஷேகம், அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. மாலை கைரளி நாட்டிய கலா ஷேத்ராவின் பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு சீளியூர், தாயனூர் பஜனை குழுவின் பஜனை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இரவு அபிஷேக அலங்கார ஆராதனை நிகழ்ச்சி நடந்தன. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !