திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ADDED :1381 days ago
துாத்துக்குடி : திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1:30மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை 5:20 மணிக்கு கோயில் உட்பிரகாரத்தில் செப்பு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடந்தது. பிப்.18 வரை 12 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் சுவாமியும் அம்பாளும் வாகனங்களில் வீதி உலா வருவதல் நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப். 16ல் நடக்கிறது.கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விழாக்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் நேற்றைய விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.