உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் 17ல் தேர்த்திருவிழா

காரமடை அரங்கநாதர் கோவிலில் 17ல் தேர்த்திருவிழா

மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம், இம்மாதம் 17ம் தேதி நடக்கிறது.

கோவை மாவட்டம், காரமடையில் பழமையான வைணவ ஸ்தலமான அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், மாசிமகத் தேர்த்திருவிழா, வெகு விமரிசையாக நடைபெறும்.தேர் திருவிழா நடத்துவது குறித்து, ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.கொரோனா நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடித்து, தேர் திருவிழாவையும், தேரோட்டத்தையும் நடத்த, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவில் செயல் அலுவலர் லோகநாதன் கூறுகையில், வரும் 11ம் தேதி கொடியேற்றம், 15ம் தேதி பெட்டதம்மன் அழைப்பு, 16ல் திருக்கல்யாண உற்சவம், 17ம் தேதி தேரோட்டம் முன்னிட்டு மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். 18ல் பந்த சேவை மற்றும் பரிவேட்டையும், 19ல் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !